தமிழ் மக்களுக்கு உண்மையாக நேர்மையாகச் செயற்படக் கூடிய எங்களது தரப்பை வளரவிடாமல் முடக்குவதற்கு சதி - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ் மக்களுக்கு உண்மையாக நேர்மையாகச் செயற்படக் கூடிய எங்களது தரப்பை வளரவிடாமல் முடக்குவதற்கு சதி - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ் மக்களுக்கு உண்மையாக நேர்மையாகச் செயற்படக் கூடிய எங்களது தரப்பை வளரவிடாமல் முடக்குவதற்கு சதி - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

கூட்டமைப்பு தவறு என்று என்று சொல்லிக் கொண்டு அதே தவறுகளைச் செய்யக் கூடிய தரப்புக்களோடு இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நேர்மையாக உண்மையாக செயற்படக் கூடிய எங்களது தரப்பு வளர்ந்துவிடக்கூடாது என்பதில் பல்வேறு சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக அணியொன்று உருவாக்கப்படுகின்ற நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ் மக்கள் மட்டத்தில் இருக்கக் கூடிய சவால் இந்த பத்து வருசத்தில் எங்களுக்கென்று தலைமைத்தவம் கிடையாது. இருக்கவில்லை. வேறு வேறு தரப்புக்களின் தேவைக்காக இருந்த முகவர்கள் தான் இருந்திருக்கிறார்களே தவிர தமிழ் மக்களுக்கென்று ஒரு தலைமைத்தவம் இல்லை.

2009 மே மாதத்திற்கு பிற்காடு தலைமைத்துவம் இல்லை. வெற்றிடம் தான் இருந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கென்று தலைமைத்துவம் இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. ஆழமாகப் பார்த்தால் அது தான் யதார்த்தம்.  தலைமை என்று ஏமாந்து வாக்களித்த மக்கள் இன்றைக்கு வெறுப்பில் நிராகரித்து ஒரு புதியதை தேடுகின்றனர். அந்தப் புதியது ஒரு சரியான நேர்மையான உண்மையான ஒரு புதிய நேர்மையாக சரியான கலாசாரத்தை ஏற்படுத்தக் கூடிய தரப்பாக நாங்கள் எங்களை அடையாளப்படுத்த வேண்டும். அதை; தான் நாங்கள் செய்ய் வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு பிழை என்று சொல்லிக் கொண்டு இருக்கிற இடத்தில் கூட்டமைப்பில் நேற்று வரையும் இருந்த பதவிகள் முழுவதையும் அனுபவித்து தங்களுக்கு பதவியில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக நே;றறுவரைக்கும் இருந்துவிட்டு கூட்டமைப்பு நாளைக்கு தோற்கப் போகிறது என்று தெரிய வரும் போது வெளியில் வந்துவிட்டு தாங்கள் தான் அந்த புதிய தலைமைத்துவமாக வர வேண்டுமென்று செயற்படுகிற தரப்போடு; என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட தரப்பொடு எவ்வளவு தூரம் நாங்கள் சேர்ந்து போகலாம் என்பது ஒரு கேள்விக்குறி.

நாங்கள் மிகத் தெளிவாக பார்க்கிறோம் கூட்டமைப்பு பிழை என்று சொல்லிப் போட்டு இன்னுமொரு கூட்டமைப்பை உருவாக்கிறதுக்கு நாங்கள் தயார் இல்லை. அதே போக்கில் அதே பிழைகளைச் செய்த நேற்று வரை அதுக்குள்ள இருந்து முழுமையாக பதவிகளை அனுபவித்து போட்டு இன்றைக்கு ஒரிஐpனல் கூட்டமைப்பு தோற்கடிப்படப் போகிறது ஆகவே தாங்கள் எப்படியாவது வந்து அவர்கள் தோற்:றுப் போகிற இடத்தில் வரலாமென்று பார்க்கின்றனர்.

கூட்டமைப்பு செய்த அதே பிழைகளைச் செய்கிறதற்கு எந்தவொரு இடத்திலும் திருந்துவதற்குத் தயாரில்லாத தரப்புக்களோடு சேர்வதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மக்களைப் பொறுத்தவரையில் மக்கள் முடிவெடுக்க வேண்டும். கூட்டமைப்பு பத்து வருசம் செய்த பிழைகளுக்கு மாற்றீடாக இன்னுமொரு அதே மாற்றீடாக அதே பிழைகளைச் செய்கிற தரப்பு இன்னுமொரு பெயர்ப்பலகையுடன் வருகிறதென்றால் அதைவிடுத்து நேர்மையாக அர்ப்பணிப்போட செயற்படக் கூடிய கொள்கையில் விட்டுக் கொடுக்காத மிக உறுதியாக இருக்கக் கூடிய புதிய தலைமைத்துவமும் புதிய அரசியல் கலாச்சாரமும் ஒன்றை உருவாக்க வெண்டும்.

அந்தப் பாதையில் தமிழ் மக்களுக்கான எதிர்காலத்தை ஏற்படுத்தாட்டி சரியான ஒரு பாதையை புதியதொரு பாதையை தேர்ந்தெடுக்காவிட்டால் கணிசமான நெருக்கடிக்குள் தள்ளப்படுவோம் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த உண்மையை மக்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பிழையான தரப்பு யார் என்பதை அடையாளப்படுத்தப்பட்டு இரக்கிறது. அதே நேரம் சரியான தரப்பை மக்கள் அடையாளப்படுத்த வேண்டும். அந்தச் சரியான தரப்பு நாங்கள் என்பதை இல்லாமல் செய்வதற்குத் தான் பல முயற்சிகள் நடக்குது என்றதையும் எங்கட மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தனித்துப் போட்டியிடவும் இல்லை. 2010இல் இருந்த வெளியில் இருக்கின்ற தரப்புக்களோடு கூட்டுச் சேர்ந்த தான் நாங்கள் வளர்ந்து வருகிறோம். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் இருக்கின்ற தரப்பினர்கள் அனைவரும் முன்னணியின் உறுப்பினர்கள் அல்லர். மாறி மாறி புத்திஐpவிகள் பொது அமைப்புக்கள் என பலர் எம்முடன் வந்து சேர்கின்றனர். அந்தப் பாதை தொடரும்.

ஏங்களைப் பொறுத்தவரையில் இதயசுத்தியோடு இந்தக் கொள்கையை விரும்புகிற இந்தக் கொள்கைக்காக அதாவது தமிழ்த் தேசத்திற்காக தமிழ் இறைமையை அங்கீகரிப்பதற்காக பாடுபடத் தயாராக இருக்கக் கூடிய அனைத்து தரப்புகளையும் சேர்த்து நாங்கள் பயணிக் தயாராக இருக்கிறோம். ஆனால் போலியாக வெறுமனே சொற்பதங்களாக மக்களை ஏமாற்றுவதற்காக பயன்படுத்திப் போட்டு ஒரு முக்கியமான கட்டத்தில் தமிழ் மக்களை ஒரு மோசமான ஒரு இடத்திற்கு தள்ளுகிற தரப்புகளோடு நாங்கள் இணங்கண்டிருக்கிற தரப்புகளோடு கூட்டணி என்று காட்டுவதற்காக நாங்கள் சேர்வதற்கு தயார் இல்லை.

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலிலும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தனாங்கள். அந்தக் கூட்டுக்களை அங்கீகரிக்க தயாரில்லாத தரப்புக்கள் ஏதோ நாங்கள் தனித்து மட்டும் தான் நிற்கிறோம் எங்களுடன் வேறு தரப்புக்கள் இல்லை என்று காட்டுவதற்கு சொல்கிற பொய்ப்பிரச்சாரங்களை உண்மையாக ஒரு மாற்று நேர்மை இல்லாத தரப்புகளோடு நாங்கள் கூட்டுச் சேர்வதற்கு தயாரில்லை.

எங்கட கொள்கை தமிழ்த் தேசத்துடைய கொள்கை. இது முன்னணி உரிமை கோரக் கூடிய விசயமல்ல. இந்தக் கொள்கை என்பது 70 வருடங்களாக வளர்ந்த வருகிற கொள்கை. அந்தக் கொள்கையை தொடர்சசியாக கடைப்பிடிக்கிறதுக்கு போருக்குப் பிறகு இருக்கிற ஒரே ஒரு தரப்பு நாங்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் அந்தக் கொள்கை சரி என்று சொல்லி பல புத்திஐpவிகள் அமைப்புக்கள் நபர்கள் எங்களோட வந்து சேர்ந்திருக்கின்றனர். அப்படி தான் நாம் வளர்ந்தள்ளொம். அந்தப் பாதை பயணம்; தொடரும

ஒரு நேர்மையாக இதயசுத்தியொடு அதாவது தமிழ்த் தேசம் என்ற விடயத்தை ஏற்றுக் கொண்ட அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பாடுபடக் கூடிய ஒரு நேர்மையான ஊழல் இல்லாத தரப்புக்கள் எங்களுடன் சேர்வதை நிச்சயமாக நாங்கள் அரவணைப்போம். அதில் மாற்றுக் கருத்தில்லை. அது இப்பவும் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதற்கு அப்படிப்பட்ட ஒன்று சேர்கிற தன்மை; பலப்படும்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலலும் நாங்கள் தனித்த நின்றதாகச் சொல்லப்பட்டது. ஆனால் யதார்த்தம் நாங்கள் தனித்து நிற்கவில்லை. போன தேர்தலில் கூட நேர்மையான தரப்புக்களோட கூட்டுச் சேர்ந்த தான் போட்டியிட்டோம். ஆனால் சித்தரிக்கப்பட்டது தனித்த நின்றதாகத் தான். ஆனால் பெயருக்காவது நாங்கள் தனித்து நின்றோம் என்று சொன்னால் கூட கூடு;டமைப்பு ஒரு கூட்டு. அதே போல ஈபிஆர்எல்எப் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் இருக்கிற உதிரிகளைச் சேர்த்து ஒரு கூட்டென்று காட்டினார்கள்.
ஆக அதில் யார் வென்றது யார் வளர்ந்தது. அந்த தேர்தலில் உண்மையில் யார் வென்றது வளர்ச்சியடைந்தது என்றால் முன்னணி மட்டும் தான் மற்றத் தரப்புக்கள் எல்லாம் தோல்லவியைடைந்த, 85 வீதமான வாக்கைப் பெற்ற கூட்டமைப்பு 35 வீதமான வாக்கைப் பெற்றது. தாங்கள் தான் மாற்றுக் கூட்டு எனறு காட்டி உதயசூரியன் படுதோல்விடையந்தது.

ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துருவாக்கங்கள் எல்லாமே முன்னணியை தோற்கடிக்க வேண்டும். எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும். ஒரு நேர்மையான தமிழ் தலைமைதுவம் புதுசாக வரக் கூடாது. வேறு ஒரு தரப்பின் தயவில் வருகிற தலைமைத்தவம் தான் தேவை என்றதை விரும்புகிற தரப்புகள் தான் எங்களை திட்டமிட்டு இப்படிப்பட்டை சிந்தனைகளைச் செய்த மக்கள் மட்டத்தில் ஒரு நேர்மையான தலைமைத்துவத்தைக் கொடுக்க விடாமல் அந்த தலைமைத்துவத்தை பலவீனமான ஒரு தரப்பாக காட்டவதற்கு திட்டமிட்டுச் செய்கிற பரப்புரை.

ஏன்னைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் மக்கள் அந்தப் பரப்புரையை ஏற்றுக் கொள்ளவில்லை. நிராகரித்து தான் முன்னணியை பலப்படுத்தினார்கள். இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் இந்த உண்மைகளை இன்னும் இன்னும் பரிந்து எங்களை; இன்னும் பலப்படுத்தி உண்மையான நேர்மையான தலைதை;துவத்தை உருவாக்கு கொடுப்பார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post