வடக்கு புதிய ஆளுநருக்கு நாளை காலை வவுனியாவில் பிராமாண்ட வரவேற்பு - மதியம் யாழில் கடமை பெறுப்பேற்கிறார்
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிஎஸ்எம் சார்ள்ஸ் நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக பிஎஸ்எம் சார்ள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.
சுகாதாரம்இ சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர்இ வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில் இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.
இதேவேளை வடக்கு மாகாணத்துக்கான நிதி ஆணை உள்ளிட்ட ஆவணங்களில் அவர் நேற்று கையொப்பமிட்டார் என்று அறியமுடிகிறது. கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மாகாண அதிகாரிகள் அவரை நேற்றுச் சந்தித்து அதிமுக்கியமான ஆவணங்களில் கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Post a Comment