புதிய அரசின் அபிவிருத்திக்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அங்கஐன் கோரிக்கை - Yarl Voice புதிய அரசின் அபிவிருத்திக்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அங்கஐன் கோரிக்கை - Yarl Voice

புதிய அரசின் அபிவிருத்திக்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - அங்கஐன் கோரிக்கை


கடந்த அரசுடன் இணைந்து செயற்பட்ட கூட்டமைப்பினர் தீர்வு தீர்வு என்று சொல்லி தீர்வையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தியையும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் பல்வேறு அபிவிருத்திகளை செய்கின்ற அதே நேரத்தில் தீர்வை நோக்கியும் பயணிப்போம். ஆகையினால் மக்களுக்காக அரசியலில் இருக்கின்றவர்கள் அந்த அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதனை வைத்துக் கொண்டு என்னாலான சேவைகளை மக்களுக்கு தொடர்ந்தும் முன்னெடுப்பேன். குறிப்பாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தியை இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு முன்கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளேன். கடந்த அரசில் அபிவிருத்தி வருமென்று சொன்னார்கள், தீர்வு வருமென்று சொன்னார்கள். அதுவும் நாளைக்கு நாளைன்டைக்கு என்றனர். அதற்கு மேலாக புது வருடம், பொங்கல், திபாவளி என்றெல்லாம்; சொன்னார்கள்.

ஆனால் அவை ஏதும் இல்லாமல் ஆறுதல் பரிசாக வந்தது தான் கம்பெரலியா. ஆனால் அதுவும் பாகுபாடு பார்த்த அபிவிருத்தியாகவே இருந்தது. அதாவது இருக்கிறவர்களுக்கு தான் அபிவிருத்தி சேர்ந்ததோ ஒழிய  இல்லாதவர்களுக்கு அந்த அபிவிருத்தி சேரவில்லை. அதாவது கட்சி, மதம், பார்த்து தங்களுடைய நண்பர்கள் உறவுகள் என்றலெ;லாம் பார்த்து தான் அந்த அபிவிருத்தி போய் சேர்ந்ததே ஒழிய உண்மையாகவே கஸ்ரப்பட்டவர்கள் தேவையானவர்கள் என்று பார்த்து இந்த அபிவிருத்தி போய்ச் சேரவில்லை.

இந்தப் பாகுபாடு பலத்த பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.. அதை மாற்ற வேண்டும். அதற்கு ஒட்டுமொத்தமாக எல்லா கிராமங்களிலும் அபிவிருத்தி செயற்பாடுகள் சமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கமைய யாழ் மாவட்டத்திற்கு சமமான அபிவிருத்தியை கொண்டு வந்து செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

மாவட்டத்திற்கு முக்கியமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற வகையிலையே எனது செயற்பாடுகள் அமையும். அதற்கமைய நிர்வாகத்தையும் சிறப்பான விளைத்திறனான நிர்வாக கட்டமைப்பாக மாற்றி அரச உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து கிராமங்களுக்கு அபிவிருத்தியை கொண்ட செல்வது தான் என்னுடைய நோக்கம்.

நிச்சயமாக பலதை அபிவிருத்திகளை கொண்டு வருவோம். அதனூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்வோம். குறிப்பாக நிறைவான கிராமங்கள் நிறைவான குடும்பங்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 5 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் முதற்கட்டமாக ஐனவரி பெப்ரவரி மாதத்தில் 20 இலட்சம் ருபா அதாவது 2 மில்லியனுக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகிறது.

அந்த திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற் போது யாழ் மாவட்டத்தின் 435 கிராம சேவகர் பிரிவிலும் அனைத்து இடங்களுக்கும் இந்த வேலைத்திட்டங்கள் சென்றடையும். அவ்வாறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்ற போது கிராமங்கள், பிரதேசங்கள் மாவட்டம் என பல முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும். அவ்வாறு புதுpய புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டால் குடும்பங்களின் வர்க்கைத் தரம் உயரும், வருமானங்கள் அதிகரிக்கும், அதனடிப்படையில் அவர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

புதிய அபிவிருத்தி வேலைத் திட்டமென்பது வாழ்வாதாரத்தை நோக்கி இருக்க வேண்டுமென்றும் ஐனாதிபதி கூறியிருக்கின்றார். அதாவது வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியிலான முன்னெற்றத்தை நோக்கிய அபிவிருத்திகளை நிச்சயம் கொண்டு வருவோம். இன்றைக்கு வறுமையை ஒழித்தால் தான் எமது மாவட்டங்களில் முன்னர் இருந்த நிலைமைக்காவது நாங்கள் முதலில் செல்லலாம் என்ற நிலை இருக்கிறது.

ஏனெனில் கடந்த முப்பது வருச யுத்தத்தில் நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமது மாகாணம் கடைசியாகத் தான் இருக்கிறது. கல்வி, விவசாயம், மீன்பிடி, பொருளதாரம் என பல துறைகளிலும்; கடைசியாக உள்ளது. அதை மாற்றியமைத்து ஏனைய மாவட்டங்ள் போன்று வருவதற்கு தேவையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அதே நேரம் எங்களுடைய வறுமையை போக்க வேண்டும் என்கின்ற போது வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும். வியாபார வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை நாடு முழுவதும் ஐனாதிபதி கொடுக்க இருக்கிறார். அந்த வேலை வாய்ப்பை ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 300 இற்கு மேற்பட்ட இளைஞர்களை எடுப்பதற்கு முடிவெடுத்திருக்கிறோம். அவ்வாறு தெரிவு செய்யப்படுகிற இளைஞர்கள் வறுமைக் கோட்டிற்குள் இருக்க வேண்டுமென்பது நிச்சயமான ஒரு வேண்டுகோளாக இருக்கிறது.

ஏனென்றால் அவர்கள் சமுரத்தி முத்திரரையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது சமுரத்தி முத்திரரையை எடுக்கக் கூடிய தகுதியில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதனூடாக அந்ததந்த மாகாணங்களிலுள்ளவர்களுக்கு அந்ததந்த மாவட்டங்கள் ,கிராமங்களுக்கு அந்த வேலை வாய்ப்புக்கள் போய் சேர வேண்டும். அதனூடாக மக்களுடைய வாழ்வாதாரம் முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

அதே நேரம் அவர்களுடைய சமுரத்தி முத்திரை அவர்களிடம் இரந்து எடுத்து இன்னுமொருகவருக்கு கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதனடிப்படையில் வறுமையை முதலில் ஒழித்து எங்கள் இலக்குகளை அடைய முடியும். கிராமங்களில் அவர்களுக்கு ஒரு சாதகான சூழ்நிலை வரும். அதனூடாக பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்களாகக்கி புதிய புதிய முயற்சியாளர்களை உருவாக்குவது தான் நோக்கம்.

கடந்த அரசாங்கம் செய்த வேலைத் திட்டங்கள் என்பதற்கு மேலாக இன்றைக்கு எமது மக்களுக்கு அது தேவiயான வேலைத் திட்டம் என்றால் அதை முன்னெடுத்துச் செல்லத் தான் வேண்டும். அதாவது கடந்த அரசாங்கம் மக்களுக்கு தேவையில்லாத அபிவிருத்தியை திணத்திருந்தால் அதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் மக்களுக்கு தேவையான அபிவிருத்தியாக இருந்தால் அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்தச் செல்வதற்கு நான் என்னுடைய முழுமையான முயற்சியை கொடுப்பேன். அதே நேரத்தில் எங்களுடைய புதிய புதிய அபிவிருத்திகளையும் முன்னெடுக்க இருக்கின்றோம்.

மக்களுக்கான அபிவிருத்திகளுக்கு இங்குள்ள கட்சிகள் அனைவரும் ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன். ஏனெனில் இங்கிருப்பவர்கள் அனைவரும் அரசியல் செய்வது எங்களுடைய மக்களுக்காகத் தான். ஆகவே எங்களுடைய மக்களுடைய முன்னேற்றத்திற்காக முன்னுரிமை அடிப்படையில்  அபிவிருத்திப் பணிகளை நாங்கள் முன்னெடுக்கின்ற போது அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்.

ஏனென்றால் எங்களுடைய பிரதேசம் அபிவிருத்தி செய்யாமல் நீண்ட காலம் இருக்கிறது. ஆகவே கிடைக்கின்ற அபிவிருத்திகளை எடுத்துக் கொண்டு நாங்கள் மேலும் ஏதாவது அபிவிருத்தியை எடுக்க முடிமென்றால் அதனையும் எடுத்துச் செயற்படுத்துவோம். எங்களுடைய மக்களை வளப்படுத்தும் போது தான் எங்கள் உரிமை சார்ந்த இலக்கை நோக்கியும் நாங்கள் பயணிக்க முடியும்.

குறிப்பாக கடந்த அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி என்று சொன்னாலும் அரசாங்கத்துடன் இணைந்து தானே செயற்பட்டு வந்தார்கள். அந்த நேரம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்ந்து முன்னெடுக்க நாங்களும் ஒழ்துழைப்பு கொடுப்போம். ஆனால் அந்த அபிவிருத்திகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இன்றைக்கு நாங்கள் அரசில் இருக்கிறோம் என்ற அடிப்படையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எடுத்துக் கொண்டு செல்கின்ற போது அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் அரசியலில் இல்லாமல் போவார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post