யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை அபிவிருத்தி திட்ட்ங்களுக்கு பயன்படுத்ததன் காரணமாக நிதிகள் திரும்பி சென்றுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.நான் நினைக்கின்றேன் அமைச்சர் நிதி அமைச்சில் உள்ள தரவுகள் தெரியாமல் கூட்ட்டமைப்பின் மீது திட்டமிடட வகையில் சேறு பூச வேண்டும் என்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டிடை முன்வைத்துள்ளார்.
ஏனெனில் வடக்கு மாகாண சபையின் ஆயுட்கலாம் நிறைவடைந்து நீண்ட காலம் முடிந்த பின்னர் இப்போது இந்த குற்றச்சாட்டிடை முன்வைத்துள்ளார்.வடக்கு மாகாண சபையை ஆடசி செய்தது தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு என்பதால் தற்போது விசமத்தனமான குற்றச்சாட்டிடை கூறுகின்றார்.மாகாண சபை ஆடசியில் இருந்த போது சபை உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்த்திருந்தனர்.அவர்களுக்கு தரவுகள் தெரியாமல் அதனை முன்வைத்திருக்கலாம் .அந்த குற்றச் சட்டு முன்வைக்கப்பட்ட்டபோதே நான் உரிய தரவுகளுடன் உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தேன்.
இப்போது அதே குற்றச்ஸ்ட்டாட்டினை மகிந்த தரப்பு அமைச்சர் முன்வைத்துள்ளார்.இது தொடர்பில் தெளிவு படுத்தவேண்டிய தேவை உள்ளது.ஏனெனில் எடுத்ததுக்கு எல்லாம் மாகாண சபை நிதி திரும்பிச் சென்றது என சொல்கின்ற போக்கு காணப்படுகின்றது.அவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைப்பவர்கள் முதலில் நிதி அமைச்சின் தரவுகளை பார்த்துவிட்டு பேசவேண்டும்.
மேலும் மாகாண சபை ஆடசியில் இருந்தபோது நாம் கோரிய நிதிகள் கிடைக்கவில்லை.நாம் கேட்ட்தில் மூன்றில் ஒரு பங்கை கூட தரவில்லை.அவ்வாறான நிலையில் தேர்தல் அரசியலுக்காக விசமத்தனமான குற்றங்களை முன்வைக்கக் கூடாது.மாகாண சபையின் நிதியில் இருந்து ஒரு ரூபாய் பணம் கூட திரும்பி செல்லவில்லை.என்பதை அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment