பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை 1500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் ஆடி அரியேஜ் மற்றும் ஹாட் கரோனீ ஆகிய மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டு சுற்றுப்புறங்களில் வெள்ள நீர் புகுந்ததால் 1500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.
அத்தோடுஇ குறித்த வெள்ளப்பெருக்கினால்இ போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளதோடு 40000 வீடுகளுக்கு மேல் மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினிலிருந்து தற்போது பிரான்ஸில் மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாகஇ ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
Post a Comment