யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப்பொருளுக்கு எதிராக போலீசாரால் மேற்கொள்ளப்படும் சிறந்த நடவடிக்கையில் பாதிக்கப்படும் சாரதி காப்பாளர்கலை கவனத்தில் கொள்ளாத இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களுக்கான சேவை பாதிக்காத வகையில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் செயலிழந்த நிலையில் நாளாந்தம் வருகை தரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் பேருந்து நிலையத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த பேருந்து நிலையத்துக்குள் போலீஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துல்லனர்.
குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சேர்ந்த சாரதிகள் காப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அன்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அதிக சமூகவிரோத செயல்கள் இடம்பெறுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் யாழ் நகருக்கு வரும் தனியார் கல்வி நிலைய மானவ மாணவிகள் முகம் சுலிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.எனவே பேருந்து நிலையத்திற்குல் நிரந்த பொலிச் காவலரன் அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த்ஹமை குறிப்பிடத்தக்கது.
--
Post a Comment