இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதவது
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் காரைநகர்- யாழ்ப்பாணம் வீதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்று பயனித்துல்லது.
குறித்த டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப் படையினர் வழி மறுத்துள்ளனர்.அப்போது டிப்பர் வாகன சாரதி நடு வீதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுல்லார்.டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் அதற்குள் இருந்து 100 கிலோ கஞ்சா போதைப் பொருளை மீட்டதாக தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியன மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுது வருகின்றனர்.
Post a Comment