யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து இதுவரை காலமும் குறிப்பிட்ட சில தினங்கள் மட்மே இந்தியாவிற்கான விமான சேவை இடம்பெற்று வந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஒவ்வொருநாளும் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.nஐயசேகரன் தெரிவித்துள்ளார்.
யுhழ் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
யுhழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்தியாவிற்கான வஜமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ளன. ஆயினும் அந்தச் சேவைகள் என்பது குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே நடந்தது வந்திருந்தது. இந்த நிலையில் பலரதும் கோரிக்கைகளுக்கு அமைய பயணிகளுக்காக இந்த சேவை இன்னும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை விமான சேவையில் ஈடுபடும் நிறுவமே எமக்கு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை நாம் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இங்கு புதிதாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் விமான சேவைகள் வர்த்தக்கர்கள் பொது மக்களுக்கு மகிழ்ச்சியையும் நன்மையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் அதன் சேவைகள் இன்னும் அதிகரிப்படுவது அனைவருக்கும் மிக மகிழ்ச்சியாகவும் பல வழிகளிலும் நன்மையை ஏற்படுத்துவதாகவுமே அமைகின்றது.
இதே வேளை எமது நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்த விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் காங்கேசன்துறை துறைமுககம் புனரமைக்கப்பட்டு அதனுடான கப்பல் சேவைகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
இச் சந்திப்பில் வர்த்தக சங்கத் தலைவர் nஐனக்குமார் உள்ளிட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment