பிறந்த 30 மணித்தியாலங்களில் சீனக் குழந்தையொன்றுக்கு கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவைரஸால் பீடிக்கப்பட்ட மிக இளவயதுள்ள குழந்தையாக இக்குழந்தை பதிவாகியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவைரஸின் மய்யமான வுஹானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்னர் குழந்தையின் தாய் கொரோனாவைரஸைக் கொண்டுள்ளார். இந்நிலையில்இ கருவிலோ அல்லது பிறந்த பின்னரோ குழந்தைக்கு கொரோனாவைரஸ் சென்றது என்பது தெளிவில்லாமல் உள்ளது.
இன்று வரையில் 563 பேர் இறந்துள்ளதுடன் 28 018 பேர் தொற்றுக்குள்ளாகிய கொரனாவைரஸானது குறிப்பிட்டளவு சிறுவர்களையே பீடித்துள்ளது.
மேற்குறித்த குழந்தை தொடர்பான செய்தியை நேற்றிரவு சீன அரச ஊடகமான ஸின்குவா வெளியிட்டிருந்தது. 3.25 கிலோகிராமுடைய குறித்த குழந்தையானது தற்போது நிலையாக இருப்பதாகவும்இ கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் ஸின்குவா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்கள் தவிர 24702 பேர் கொரோனாவைரஸைக் கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் 186354 பேர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவைரஸ் பரவியுள்ளதாக சீனாவுக்கு வெளியேயான 25 நாடுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவற்றில் 191 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்கள் காணப்படுகின்ற நிலையில்இ இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை கொரோனாவைரஸுக்கான மூன்று மாத பதிலளிப்புத் திட்டமொன்றுக்கு நிதியளிப்பதற்கு 675 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்ஹனொம் கிபிறீயெஸுஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படுக்கைகள் மருத்துவ உபகரகணகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நேற்று எச்சரித்துள்ள வுஹான் அதிகாரியொருவர் வுஹானிலுள்ள ஹொட்டல்கள் பாடசாலைகளை சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகக் கூறியுள்ளார்.
Post a Comment