கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்இ இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரத்து 433 பேர் குணமடைந்துள்ளதுடன் 12 ஆயிரத்து 63 பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தென்கொரியாவில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக உயர்வடைந்துள்ளது.
ஒரே இரவில் மாத்திரம் 31 பேர் புதிதாக இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஈரானின் தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சரின் ஆலோசகரான அலிரெஸா வஹாப்சாதே உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த உயிரிழப்புகளானது மத்திய கிழக்கில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது மொத்தமாக 30 நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment