இந்தியாவின் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ச்சியாக நான்கு நாட்களாக இடம்பெற்ற மோசமான வன்முறைகளில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையானது இன்று 35ஆக அதிகரித்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில்இ உத்தரப் பிரதேசத்திலிருந்து குண்டர்களை ஒழுங்கமைப்பதற்கும் இலக்கு வைக்க வேண்டிய பகுதிகளை அடையாளங்காணவும் வட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டதாக டெல்லி பொலிஸ் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இன்றும் ஆங்காங்கே வன்முறை நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் குறித்த பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் வீதி ரோந்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா மெளஜ்பூர் கரவல் நகர் பகுதிகளில் நேற்றிரவு தீ வைப்பு வன்முறைச் சம்பவ தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை 48 முதற் குற்ற அறிக்கைகளை டெல்லி பொலிஸ் பதிவு செய்துள்ளதுடன் வன்முறையுடன் தொடர்புடைய 130 பேரை கைது செய்துள்ளனர்.
Post a Comment