சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உருவான உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா முழுதும் பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 73 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிதாக 3141 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டதில் கரோனா தொற்றுக்கு இதுவரை 31161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பலியான 73 பேர்களில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட 30000 பேர்களில் சுமார் 4800 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.
இதோடு மட்டுமல்லாமல் மேலும் 26000 பேர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சீன சுகாதார ஆணையம் கவலை தரும் செய்தியை வெளியிட்டுள்ளது.
Post a Comment