யாழிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது புதிய கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
நான்கு நபர்கள் கூடி நான்கு கட்சிகள் கூட்டுச் சேர்ந்ததாக செய்திகள் வெளிவந்து இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் அது நான்கோ பத்தோ பதினைந்தோ என்பதல்ல. உண்மையில் எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாக செயற்படுகின்றனர் என்பதே முக்கியமானது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பில் இருந்து விலகிய நாளில் இருந்து நாங்கள் கொள்கை ரீதியாக அந்தக் கூட்டமைப்பு பிழைவிடுகிறது. ஓற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகிற அளிவிற்கு விலை போயிருக்கிறது என்ற குற்றச்சாட்டை பத்து வருசமாக முன்வைத்து வருகிறோம்.
அந்த அடிப்படையில் ஒரு புதிய தலைமைத்துவம் நேர்மையான தலைமைத்துவம் அவசியமென்ற வகையில் இந்த பத்து வருசமாக இயங்கி வந்த நிலையில் இன்றைக்கு இரண்டாம் பெரும் கட்சியாக வடகிழக்கில் நாங்கள் இருக்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு நிலைமை இருக்கையில் எங்களுடைய வளர்ச்சியை தடுப்பதற்காக கொள்கை ரீதியாக எந்தவிதமான அதாவது கூட்டமைப்பிலிருந்த எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் வேறுபாடும் இல்லாமல் இன்னுமொரு மாற்று அமைப்பு என்று கூறிக் கொண்டு ஒரு சிலர் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தலில் எங்களுக்கு வரக் கூடிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் குழப்புவதற்கு செயற்பட முயற்சிக்கின்றார்கள்.
அந்த வகையில் தான் இந்த புதிய கூட்டு முயற்சிகளை பார்க்கின்றோம். ஏனெனில் மிகத் தெளிவாக கூட்டமைப்புக்கு வித்தியாசமாக கொள்கை ரீதியில் சரியான வழியில் போறதுக்கு தயாரான ஒரு முயற்சி அல்ல என்று ஆணித்தரமாக நாங்கள் சொல்வதற்குக் காரணம் என்னவெனில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஐனாதிபதித் தேர்தல் நடைபெற இருந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து தமிழ்க் கட்சிகள் என்று சொல்லக் கூடிய தரப்புக்கள் மட்டத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக .அந்த முயற்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கக் கூடியதரப்புக்களும் ஈடுபட்டது. முண்ணயின் முக்கியமான பங்களிப்போடு 13 கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த 13 ம் இறுதி வடிவம் நாங்கள் தான் தயாரித்தது என்றதையும் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் நாங்கள் சொன்ன விடயம் என்னவெனில் கொள்கையளவில் இந்த 13 கோட்பாடுகளையும் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் கடந்த காலங்களில் இந்தக் கோட்பாடுகளை கேலிக்குட்படுத்தினீர்கள் நக்கலடித்தீர்கள் நையாண்டி பன்னிணீர்கள் ஆனால் இப்போ ஏதோவொரு காரணங்களுக்காக நாங்கள் சொல்கிற இந்த கோட்பாடுகளுக்கு இணங்கி வருகின்றீர்கள். அது மிகவும் நல்லம்.
ஆனால் இறந்தக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் தான் நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். அங்கு ஏற்கனவே மூன்று வருசமாக ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த இடைக்கால அறிக்கை ஒரு ஒற்றையாட்சி என்ற ஒரு விடயத்தை இங்கு பங்குபற்றிக் கொண்டிருக்கிற ஆறு கட்சிகளில் தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய ஐந்த கட்சிகளும் அது ஒரு ஒற்றையாட்சி என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டி அதை நிராகரித்தும் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒற்றையாட்சி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டிருக்கையில் இங்கு நாங்கள் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கிற தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கிற சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டித் தீர்வைக் கோரியிருப்பது நேருக்கு நேர் முரண்பட்ட விசயங்கள். கோட்பாட்டு ரீதியாக சமஷ்டி என்றும் தேசம் என்றும் பேசினாலும் கூட அங்கே நடைமுறையில் வரப்போகின்ற விசயம் ஒற்றையாட்சிக்குரிய விசயம்.
ஆகையினால் அதனை நிராகரிக்க வேண்டுமென்று கேட்ட போது எங்களைத் தவிர அங்கு மற்ற ஐந்து தரப்புக்களும் அந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை தாங்கள் நிராகரிக்க முடியாது என்று கூறினார்கள்.
ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை என்று சொல்லி இந்த புதிய கூட்டு முயற்சி என்ற பெயரில் நான்கோ ஐந்த நபர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிற இந்த தரப்பு கொள்கை ரீதியாக இன்றைக்கு இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் அதன் செயற்பாடுகளில் இருந்த எந்தவித்த்திலும் அவர்கள் வேறுபடப் போவதில்லை என்பது பல்கலைக்கழக மாணவர்களின் அந்த முயற்சி மிகச் சிறந்த உதாரணம்.
எம்மைப் பொறுத்தவரையில் இன்றைக்கு நேர்மையான அரசியலை கொள்கை சார்ந்த அரசியலை கொண்டு போகக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். இந்த முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூகம் புத்திஐpவிகள் இந்த இனத்திற்கு தலைமை தாங்கக் கூடாது என்ற சிந்தனையில் பலரும் செயற்படுகின்றனர்.
ஏனென்றால் எங்கள் தரப்pனர்கள் நேர்மையானவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்ற சிந்தனை அவர்களுக்கு இருக்கிறதென்றால் தமிழ் மக்களை எவருமே தங்களின் தேவைக்காக பாவித்து நடுத்தெருவிற்குள் விட முடியாது என்பது தான் எங்களது நிலைப்பாடதக இருப்பது தான் காரணாக அமைகிறது.
ஏனைய ஐந்து தரப்புக்களுமே அமைப்பு தான் தேவை. தங்களுஐடய வேறு வேறு தரப்ப்புக்களின் நலன்களுக்காக விலை போய் சொந்த மக்களை விற்று செயற்படக் கூடிய தரப்புக்கள் தான் மற்ற அணைத்து தரப்புகளுக்கும் தேவை. ஆகவே மற்ற அனைத்து தரப்புகளுடைய ஒத்துழைப்பு விருப்பத்தின் அடிப்படையில் தான் கூட்டமைப்பு தனது செல்வாக்கை மக்கள் மட்டத்தில் இழந்து போயிருக்கிற நிலைமை இருக்கிறது.
ஆதனால் தமிழ் மக்கள் ஒரு புதிய தலைமைத்தவத்தை தேடிக் கொண்டிருக்கிற நிலைiமையில் அந்த புதிய தலைமைத்தவம் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முண்ணயாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் முன்னணி இந்த பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறக் கூடாதென்பதற்காக எங்களிடம் வரக்கூடிய மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏதோவொரு வகையில் உடைப்பதற்கு வாக்கு பலத்தை குறைப்பதற்கு எடுக்கிற ஒரு முயற்சியாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். இதை எல்லாத்தையும் தாண்டி தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் மாற்றுக் கருத்த இருக்க முடியாது.
இந்தக் கூட்டணி நிச்சயமாக எங்களது வாக்கு வங்கியை சரிக்காது. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கூட எங்களுடைய வாக்கு வங்கியை கடைசிநேரத்தில் சரிப்பதற்காக இந்தியாவினுடைய ஆதரவோடு இன்னொரு கூட்டு என்ற பெயரில் சுரேஸ்பிரேமச்சந்திரனும் ஆனந்தசங்கரி போன்றவர்களும் கூட்டச் சேர்ந்து தாங்கள் தான் உண்மையான மாற்று என்று சொல்லி தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
அந்த நேரத்தில் விக்கினெஸ்வரனும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதும் அனைவருக்குமு; தெரிந்த விடயம். அப்படியிருக்கவும் அந்தக் கூட்டிற்கு மக்கள் எந்தவித அங்கீகாரத்தையுமு; கொடுக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தான் அங்கீகாரத்தைக் கொடுத்திருந்தனர்.
அன்றைக்கு கூட எங்களுக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் என்னவென்றால் நாங்கள் ஒரு தனிப்போக்கு என்றும் நாங்கள் யாருடனும் கூட்டுச் சேர விருப்பமில்லை ஒரு நாளும் மக்களால் அங்கீகரிக்கக் கூடிய தரப்பு இல்லை என்ற வகையில் தான் அனைத்த தரப்புக்களும் எங்களை விமர்சித்தார்கள். ஆனால் மக்கள் அப்படிப் பார்க்கவில்லை.
மக்கள் மிகத் தெளிவாக எங்களுக்கு தான் புதிய தலைமைத்துவம் என்ற விடயத்தில் எங்களுக்கு தான் தமது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார்கள். அதில் அறுதிப் பெரும்பான்மையi எடுத்து சபைகளைக் கைப்பற்றாவிட்டாலும் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு வருகிறோம். நேர்மையான கலாசாரத்தை வெளிப்படுத்திவருகின்றோம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இன்றைக்கு வரப் போகின்ற தேர்தல் ஒரு பாராளுமன்ற தேர்தலாக இருக்கிறது. ஒட்டு மொத்த தலைமைத்துவத்தை தீர்மானிக்கிற ஒரு தேர்தலாக பார்க்கப்படுகின்ற பொழுது தமிழ் மக்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பார்கள் என்று தான் நம:புகின்றோம். கடந்த உள்ளுராட்சி தேர்தலுக்கும் விட பல மடங்கு மேலாக நாங்கள் பலப்பட்டு நிச்சயமாக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்.
தமிழ் மக்கள் பேரவையில் பல அரசியல் ஆய்வாளர் தங்கள் ஈடுபாடுகளைச் செலுத்தியிரந்த நிலையில் ஒரு கூட்டு முயற்சியொன்று தேவை என்ற கருத்தில் இருந்தவர்கள் பேரவை விக்கினெஸ்வரனின் முகவர் அமைப்பாக செயற்படுவதாக பேரவையை நாங்கள் விமர்சிக்கத் தொடங்க பேரவையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கூட்டு முயற்சி தேவை என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள்.
அவர்கள் கூட இன்றைக்கு ஒரு சில நபர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிற தரப்பை இது தேர்தலுக்குரிய ஒரு கூட்டு. இது கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டு அல்ல. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (பி) அணி அதாவது கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரளவளிக்க தயார் இல்லையென்றால் இந்த அணிக்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்று உருவாக்கப்பட்டதே தவிர கொள்கை ரீதியாக எந்த விதத்திலும் கூட்டமைப்பை விட வேறுபட்டதாக காணப்படவில்லை என்று பல மட்டத்திலும் இன்றைக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிற நிலையில் நாங்கள் அந்த விசயத்தில் மேலதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை.
அந்தத் தரப்புடன் வேலை செய்யத் தயாராக இருந்தவர்கள் கூட இன்றைக்கு அந்த தரப்பு மிகப் பிழையான பாதையில் போகின்றது அந்த தரப்பிற்கும் கூட்டமைப்பிற்கும் வித்தியாசம் இல்லை என்று அம்பலப்படுத்தியிருக்கிறது.
மேலும் இந்தக் கூட்டு தொடர்பில் கூட்டமைப்பு விமர்சிப்பது அல்லது எதிராக கருத்தை முன்வைப்பது வேடிக்கையான ஒரு விசயம். இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலில் ஒற்றுமையை முற்று முழுதாக அழித்த ஒற்றுமைக்கே இடமில்லை என்று அந்த வார்த்தையே இல்லை என்ற அளவிற்கு ஒற்றுமை என்ற கலாசாரத்தை இல்லாமல் செய்து ஒரு மிகக் கேவலமான அரசியல் கலாசாரத்தை காட்டியிருக்கிறதே கூட்டமைப்பு தான்.
இன்றைக்கு கூடு;டமைப்பு தமிழ் மக்களால் நிராகரிக்கப்படப் போகிற நிலையில் அவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற நிலையில் கடைசி ஆயுதமாகத் தான் ஒற்றுமை என்ற கோசத்தை அவர்கள் திரும்பவுமு; எழுப்ப வேண்டியிருக்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவிற்கு அவர்கள் பலவீனப்பட்டுப் போயிருக்கினம். ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் கூட்;டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் ஒற்றுமை சார்ந்த கருத்து தெரிவிப்பதை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
இந்தியவிற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓடிச் செல்கிற தமிழத் தரப்பிற்கும் மகிந்த ராஐபக்ச இந்தியாவிற்கு ஓடிச் செல்வதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. தமிழ்க் கட்சிகள் வந்து இந்தியாவின் முகவர் அமைப்புக்கள் தான். அதில் மாற்றுக் கருத்த இருக்க முடியாது. ஆனால் கோட்டாபா அல்லது மகிந்த ராஐபக்ச இந்தியாவிற்கு அழைக்கப்படுவதாக இருந்தால் அவர்களுக்கு இந்தியா மிகத் தெளிவான செய்தியை கொடுக்க விரும:புகின்றது என்பதாகவே இருக்கும்.
அதாவது கடந்த ராஐபக்ச ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நலன்கள் முழுமையாக பாதிப்படையும் வகையில் இலங்கையின் வெளிவிவகார செய்ற்பாடுகள் அமைந்திருந்தது. இந்த முறை அவர்கள் வித்தியாசமாக செயற்பட வேண்டும். கடந்த முறை மாறாக நடந்ததால் தான் அவர்கள் ஆட்சியை வீழ்த்துவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா மிகத் தீவிரமாகச் செயற்பட்டது. ஆனால் இனியாவது இந்தியாவின் நலன்கள் என்ற விசயத்தில் விளங்கிக் கொண்ட செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக தான் ராஐபக்ச தரப்பை அழைத்தார்கள்.
ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு வல்லரசு இந்தியா தன்னுடைய நலன்களைப் பேனுவதற்கு தனக்கு சவாலாக இருக்கக் கூடிய ராஐபக்ச அரசாங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே போல் இலங்கைத் தீவில் அவர்களுடைய முகவர்களாக இரப்பவர்களையும் அழைத்து தங்களுடைய கட்டளைகளை முகவர்களுக்கு இட்டு இந்த அடிப்படையில் தான் நீங்கள் செயற்பட வேண்டுமென்று சொல்லப்படுவதும் எதிர்பார்க்க கூடிய விசயங்கள் .
ஆனால் இவர்கள் எவருமே தமிழ் மக்களின் நலன்கள் என்ற கோணத்தில் செயற்படப் போறதில்லை. இதில் ஒரு தரப்பாக அரச தரப்பு சீனாவின் நலன்களை பேணப்போகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் முகவர்களாக இருக்கின்ற தமிழ் தரப்பு இந்தியாவின் நலன்களை பேணப்போகிறது.
அந்த வகையில் தமிழ் மக்;களுடைய நலன்களை மையப்படுத்தி கடந்த பத்து வருசங்களாக பல விடயங்களை சுட்டிக்காட்டி அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டிருக்கிற் தமிழ்தேசிய மக்கள் முன்னணி மட்டும் தான் தமிழ் மக்களின் நலன்கள் என்ற விடயத்தில் செயற்பட தயாராக இருக்கிறார்கள் என்ற விசயத்தை விளங்கிக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
Post a Comment