கூட்டமைப்பின் தேர்தல் கால போலிப் பிரச்சாரங்களை வடக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறாக் கூடாது, மகிந்த அரசை பலப்படுத்துங்கள் - யாழில் திஸ்ஸவிதாரண - Yarl Voice கூட்டமைப்பின் தேர்தல் கால போலிப் பிரச்சாரங்களை வடக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறாக் கூடாது, மகிந்த அரசை பலப்படுத்துங்கள் - யாழில் திஸ்ஸவிதாரண - Yarl Voice

கூட்டமைப்பின் தேர்தல் கால போலிப் பிரச்சாரங்களை வடக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறாக் கூடாது, மகிந்த அரசை பலப்படுத்துங்கள் - யாழில் திஸ்ஸவிதாரண

எதிர்வரும் பொதுத் தேர்தலில் லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது.என தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸவிதாரண வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மகிந்த தலைமையிலான அரசினை பலப்படுத்த அணிதிரளுங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்இ

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.அவர் ஓர் ஆட்கடத்தல் காரர் கொலைகாரன் என சித்தரித்தனர்.இந்த போலியான பிரச்சாரரங்களை ஐக்கிய தேசியக் கட்சியே பிரத்னமாக செய்தது.இது தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனாலும் கோத்தபாய ராகபக்ச தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக அனைத்தும் பொய்கள் என நிருபணமாகியுள்ளது.இந்த நாட்டில் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இந்திய மக்களின் குடியுருமையை பறிக்க சட்ட மூலத்தை முன்வைத்திருந்தனர்.அதற்கு எதிராக அன்றைக்கே லங்கா சமசமாஜ கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.அந்த சட்டத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவு வழங்கினார்.1948 ஆண்டு ஜே.ஆர்.ஜெவர்த்த்ன சிங்கள மொழியை அரச கரும மொழியாக கொண்டு வர முயன்றார்.அதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.

இவ்வாறு நாம் பல சந்தர்ப்பங்களில் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயர்ப்பட்டிருந்தோம்.கடந்த ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்திருநத்து.அதற்கு காரணம் ஐக்கிய தேசியக் கட்சி புதிய முதலாளித்துவ கொள்கையை கடைப்பிடிதத்தால் வரிகள் மக்கள் மீது சுமத்தப்பட்டது.இதனால் நாட்டில் செல்வந்தர்களுக்கும் வறிய ஏழை அப்பாவி மக்களுக்கும் ஒரே அளவான வரி அறவிடப்பட்டது.இதனால் ஏழைகள் இன்னும் ஏழையாகி கடனாளிகள் ஆக்கப்பட்டனர்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஓர் திட்டமிடலுடன் செயற்படவில்லை.மாறாக நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டது.ஆனால் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெர்ரியடைந்தமையினால் நாட்டுக்கு பாதகமான சோபாஇஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது.நாட்டின் ஜனாதிபதியாக சஜித் வந்திருந்தாள் நாட்டின் பெரும் பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கும்.அதிஸ்டவசமாக கோத்தபாய ஜனதிபதியாகியமையினால் நாட்டின் வளங்கள் பாதுககப்பட்டுள்ளன.

நாட்டினை முதலில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.மக்களின் பொருளாதாரம் முன்னேற வேண்டும்.அதன் ஊடாக நாட்டில் உள்ள அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள் அப்போது நாட்டில் உள்ள பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்கும்.எனவே தற்போது அபிவிருத்தியே முக்கியமாக உள்ளது.அந்த வகையில் நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.இந்த திட்டம் கிராம சேவகர்கள் ஊடாக சமுர்த்தி குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது.இதே போல வேலை அற்ற பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் பாரிய மோதல்களை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்தி வருகின்றது.கடந்த காலங்களில் கருப்பு ஜுலை கலவரம் போன்ற பல மோதல்களை இவர்களே ஏற்படுத்தினார்கள்.இதில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி தப்பிக்க முடியாது.ஆனால் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்சிகளை அறியாது அவர்களுக்கு வாக்களிக்கின்றனர்.தமிழ்க் கட்சிகள் கோத்தபாயவுக்கு எதராக கருத்துக்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கருதியே.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது.ஆகவே இங்கு வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிஇதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மகிந்த தலைமையிலான அரசினை பலப்படுத்த அணிதிரளுங்கள்.என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post