தனிவழியில் செல்ல மாட்டோம் - ரிசாட் பதியூதீன் - Yarl Voice தனிவழியில் செல்ல மாட்டோம் - ரிசாட் பதியூதீன் - Yarl Voice

தனிவழியில் செல்ல மாட்டோம் - ரிசாட் பதியூதீன்


எதிரவரும் பொதுதேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடாது என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணியுடன் இணையாமல் தமது கட்சி தனி வழியில் செல்லவுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post