சீனாவின் Hubei மாநிலத்தில் கொரோனா (COVID-19) கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
அண்மைய நிலவரப்படி கிருமித்தொற்றால் உயிரிழ்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் இரட்டிப்பாகி 242ஆக பதிவாகியுள்ளதுடன் கூடுதலாக 14 840 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
நாள் ஒன்றுக்குப் பதிவாகும் எண்ணிக்கையைவிட அது 10 மடங்கு அதிகம் என்று மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
அதைத் தொடர்ந்து சீனாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கைஇ ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஐந்துக்கு உயர்ந்துள்ளது.
கிட்டதிட்ட அறுபதாயிரம் பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் இருந்தாலும் அதனால் பெரிய அளவிலான சவால்கள் ஏற்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்தது.
Post a Comment