சின்னத்தை மாத்திரம் கண்டு கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள் என மலையக மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அவர்கள் பல சின்னங்களுக்கு சிந்தித்து வாக்களித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நகர மக்களை விட மலையக மக்கள் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.
உண்மையில் இங்கே சின்னம் ஒரு பிரச்சினை இல்லை. அது டீலர்' களின் பிரச்சினை. தான் 'டீலர்' இல்லை. தான் ஒரு 'லீடர்' என அவர் தெரிவித்துள்ளார்.
யானை கிடைத்தாலும் அன்னம் கிடைத்தாலும் நன்மையே எமது கூட்டணிக்கு யானையை தர மறுக்கின்றவர்கள் யார் என்பதை சகலரும் அறிவார்கள்.
இன்னும் ஓரிரு தினங்களில் புதிய கூட்டணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment