யாழ்ப்பாண சர்வதேச விமானத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் அதிகரித்த கட்டணம் மற்றும் இந்திய நாணயத்தை இலங்கையில் மாற்றுவதற்கேற்ற வசதியும் பயணத்தின்போது அதனை எடுத்து செல்வதற்கான வசதியை ஏற்படுதுத்தல் தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் யாழ் வணிகர் கழக உப தலைவருமான ஆர்.nஐயசேகரம் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் கடந்த 11.11.2019 திகதி தனது முதலாவது விமான சேவையினை ஆரம்பித்ததிலிருந்து விமான பயணசீட்டுக்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.
இது கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் சில இந்திய விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இது வடமாகாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
01. யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை. அத்துடன் பயணி ஒருவர் தனது விமானப்பயணத்தின் போது பயணப்பொதியாக சுமார் 15 கிலேவும் கையில் எடுத்துச்செல்லக்கூடியதாக 5 கிலோவுமாக 20கிலே மட்டுமே கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல முடியும்.
இதேவேளை கட்;டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி ஒருவர் தனது விமானப்பயணத்தின் போது பயணப்பொதியாக சுமார் 30 கிலேவும் கையில் எடுத்துச்செல்லக்கூடியதாக 7 கிலோவுமாக 37 தொடக்கம் 40 கிலே வரையான பயணப்பொதிகளை கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.
ஆகவே இப்படியான பல வசதி குறைபாடுகளுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணி ஒருவருக்கு அதிகளவான கட்டணத்தினை அறவிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
இது ஒரு பிராந்திய வசதி குறைந்த விமான நிலையம். ஆகையால் விமான பயணச்சீட்டுடன் சேர்த்து அறவிடப்படும் விமானநிலைய வரியினை (யுiசிழசவ வுயஒ) 50மூ குறைப்பு மேற்கொள்ளுமிடத்தில் பயணிகள் குறைந்த தொகைக்கு விமானப்பயணச்சீட்டினை பெறக்கூடியதாக இருக்கும்.
இதன் மூலம் வடக்குஇ கிழக்கு வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகளவான பயணிகள் பயன்பெறக்கூடியதாகவும் இருக்கும். எனவே பயணிகளின் விமானச்சீட்டுக்களின் விலையினை குறைத்து அவர்கள் பயன்பெற தாங்கள் ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
02. இலங்கையில் 14 நாட்டு நாயணங்களை இலங்கையில் உள்ள வங்கிகளில் மாற்றுவதற்கு அல்லது வங்கிகளில் பெறமுடியுமென மத்திய வங்கியின் சுற்றுநிரூபம் கூறுகிறது. ஆனால் நாள் தோறும் இலங்கையிலிருந்து பெருந்தொகையான பயணிகள் இந்தியாவிற்கும்இ இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் விமானம் மூலம் பயணிக்கின்றார்கள்.
ஆனால் இந்திய ரூபாவை எடுத்துச்செல்லவோ அல்லது அங்கிருந்து எடுத்துவரவோ சட்டரீதியான அனுமதி இல்லை. இதன் மூலம் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.
ஆகையால் கௌரவ பிரதமர் மற்றும் நிதியமைச்சராகிய தாங்கள் இதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாவை இலங்கையில் உள்ள வங்கியில் பெறுவதற்கும் மாற்றுவதற்கும் மற்றும் எடுத்து செல்வதற்கும் தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
இதன் மூலம் இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறும் போது தங்கள் அத்தியாவசிய தேவைக்காக இந்தியப்பணத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இதை தாங்கள் சட்ட ரீதியாக அமுல் நடத்த ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
Post a Comment