வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வீ.விக்கினெஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எனும் பெயரில் புதியதோர் கூட்டணிக்கான புரிந்துணர்வு யாழில் ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
இவ்வாறானதொரு கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவி வகித்த சிறிகாந்தா அங்கிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார்.
ஆத்தோடு தமது புதிய கட்சியானது விக்கினேஸ்வரனின் புதிய கூட்டணியில் இணைந்து செயற்படுமென்றும் அறிவித்திருந்தார். ஆனால் அண்மையில் சில தினங்களிற்கு முன்னர் விக்கினெஸ்வரனின் இந்தக் கூட்டை கடுமையாக விமர்சித்து அதுவொரு சாம்பாறு போன்ற கூட்டணி என்று குறிப்பிட்டதுடன் தாம் தனித்துச் செயற்படப் போதாகவும் அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலைமையில் தற்போது கட்சிகளுக்கிடையெ ஏற்படுத்தப்பட்ட சமரசங்கள் அல்லது உடன்பாடுகளினடிப்படையில் விக்கினேஸ்வரனின் புதிய கூட்டணியில் சிறிகாந்தாவின் தமிழ் தேசிய கட்சியும் மீள இணைந்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் நடைபெறவிருக்கின்ற புதிய கூட்டணிக்கான புரிந்துணரர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment