குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்...
புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு மாவட்ட அடிப்படையில் தேசிய மட்டத்தில் மூன்று திட்டங்கள் யாழ் மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
நிறைவான கிராமம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் தலா 2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் செயற்திட்டங்கள் மக்களுடைய ஆலோசனைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டு அமூழ்ப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் கிராமிய வீதிகள் கல்வெட்டுக்கள் சிறிய பாலங்கள் விவசாய உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் களஞ்சிய வசதிகள் வாராந்த சந்தைகள் சிறிய குளங்கள் வாய்க்கால்கள் அணைக்கட்டுகள் விவசாய கிணறு புனரமைப்பு சமூக குடிநீர் வழங்கல் திட்டங்கல் மற்றும் கிராமிய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக் கூடிய திட்டங்கள் உள்ளிட்டவை தெரிவு செய்து நிறைவான கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழே நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்றோம்ம்
தற்போது யாழ் மாவட்டத்தில் சுமார் 689 திட்டங்கள் இனங்கானப்பட்டு அதற்குரிய அனுமதியும் இடைக்கப்பெற்றுள்ளது. இதனுடைய மொத்த செலவீனமாக சுமார் 870 மில்லியன் ரூபா இ இதில் சுமார் 174 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே நாங்கள் இதனை துரிதமாக நிறைவுறுத்தி மக்களுக்கு பயன்பெறம் வகையில் நிறைவு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். இதில் சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன சில திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எங்களுடைய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எங்களுக்கு 30 கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்குரிய 15.5 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த திட்டங்கள் யாழ் மாவட்டத்தில் பரவலாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதனூடாகவே இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அடுத்து நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் தேசிய வீடமைப்பு அதிகார சபையினானும் எங்களுக்கு ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் சுமார் 6 வீடுகள் எனும் அடிப்படையில் முதல் கட்டமாக ஒவ்வொரு வீடு பின்பு 5 வீடுகள் என மொத்தமாக 60 வீடுகள் யாழ் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்குரிய மொத்த செலவீட்டு தொகை 36 மில்லியன் ரூபாய் அதில் முதல் கட்டமாக 7 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த மூன்று திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதை விட சில மீழ் குடியமைப்பு சம்பந்தப்பட்ட வகையிலே எங்களுக்கு 200 வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனுடைய முன்னுரிமை பட்டியல் பிரதேச செயலாளர்களிடம் இருந்து பெற்று இருக்கின்றோம் .
அத்தோடு சில தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
Post a Comment