ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கைகோர்க்கவுள்ளார்.
இதன்படி சஜித் தலைமையில் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்க எடுத்த தீர்மானத்திற்கு குமார வெல்கம எம்.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.
இறுதியில் அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அணி ஒன்றையும் இருவாக்கியிருந்தார்.
Post a Comment