இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஜெனரல் விஜித்த ரவிப்பிரியவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
இராணுவ அதிகாரி ஒருவரது நியமனத்திற்கு எதிராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று வியாழக்கிழமை பகல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து சந்தித்த அரச நிர்வாகச் சேவை தொழிற்சங்கவாதிகள் தங்களது நேரடி முறைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றனர்.
இதன்போதே பிரதமர் மேற்படி வாக்குறுதியை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment