நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலியை ஒன்பது முறை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. பந்து வீச்சுக்கு சற்று சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். டிம் சவுத்தி இந்திய அணி கேப்டன் விராட் கோலியை க்ளீன் போல்டாக்கினார்.
ஒரு ஓவரை மிகவும் சிறப்பாக வீசினார். தொடர்ந்து ஐந்து பந்துகளில் நெருக்கடி கொடுத்து 6-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலியை டிம் சவுத்தி இந்த போட்டியுடன் 9 முறை வீழ்த்தியுள்ளார்.உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை வீழ்த்த ஆடுகளத்தின் ஓத்துழைப்புதான் முக்கிய காரணம் என டிம் சவுத்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ''விராட் கோலி உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர். அவரிடம் அதிக அளவிலான பலவீனத்தை பார்க்க முடியாது. புது பந்தின்போது ஆடுகளம் சற்று கூடுதலாக பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தது. நீங்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால்இ பந்து அங்கு சில காரியங்களை செய்யும். பிட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுப்பது பொறுத்துதான் எல்லாம் அமையும்.
என்னுடைய வேலை விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதுதான். விராட் கோலி சிறந்த வீரர். சிறந்த ஃபார்மில் உள்ளார். குறிப்பாக சேஸிங்கில் அவர் அபாயகரமானவர். ஆகவே அவருக்கு எதிராக விக்கெட் வீழ்த்துவதை சிறப்பானதாக கருதுகிறேன்'' என்றார்.
Post a Comment