இந்திய இளையோர் அணியுடன் இன்று Potchefstroom மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியே உலக்கிண்ணத்தை பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்துள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 47.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பாக ஜய்ஸ்வால் 88 ஓட்டங்களையும் திலக் வர்மா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் இளையோர் அணி சார்பாக அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுததுஇ 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி மழையால் பாதிக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து டக்வர்த் லூயிஸ் முறையில் அவ்வணிக்கு 46 ஓவர்களில் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 46.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பா ஹொசைன் எமொன் 47 ஓட்டங்களையும் அணித் தலைவர் அக்பர் அலி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்திய இளையோர் அணியின் பந்துவீச்சில் பிஷோனி 4 விக்கெட்டுக்களை வீழத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை முதன்முறையாக பங்களாதேஷ் இளையோர் அணி சுவீகரித்து வரலாற்று சாதனையை பங்களாதேஷ் அணி பெற்றுள்ளது.
Post a Comment