யாழ் பல்கலைக்கழக மாணவன் வீட்டில் இனந்தெரியாதோர் தாக்குதல் - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மாணவன் வீட்டில் இனந்தெரியாதோர் தாக்குதல் - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மாணவன் வீட்டில் இனந்தெரியாதோர் தாக்குதல்

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர் மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றது.

வீட்டுக்குள் நுழைந்த நால்வர் மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே இன்றிரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post