புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்..
தமிழ் மக்கள் கொடுத்த அடிப்படையான விடயங்களுக்கான ஆணை அதாவது வடக்கு ;கிழக்கு இணைக்கப்பட வேண்டும், ஒரு சமஸ்டி அரசமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும், பௌத்தம் என்பதற்கு முதலிடம் என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இப்படி எல்லாம் ஆணை பெற்றுச் சென்ற கூட்டமைப்பினர் இறுதியாக அந்த அடிப்படை விடயங்கள் அனைத்தையும் விட்டுக் கொடுத்து ஆனாலும் இடைக்கால அறிக்கையை சமஸ்டி என்றதாகத் தான் பேசினார்கள்.
ஆகையினால் முதலாவதாக கொள்கை ரீதியாக அவர்கள் முற்று முழுதாக வேறு ஒரு பாதையில் செல்கின்ற நிலைமை ஏற்பட்டது. இதை நாங்கள் பேசியது மாத்திரமல்ல அதே போல கல்விமான்கள், புத்திஐpவிகள் போன்ற பல பேர் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்களும் வைக்கப்பட்டு வந்தது.
இது ஒருபுறமிருக்க இதே வேளையில் வடக்கு மாகாண சபையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை அன்றைய முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் அவர்கள் தலைமையில் கொண்டு வந்து நிறைவேற்றியிரந்தார்கள். ஆனால் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம். அப்படி நிறைவேற்றுவது தவறானது என சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் விக்கினேஸ்வரனிடம் திரும்ப திரும்ப சொல்லியிருந்தார்கள்.
ஆனாலும் அவற்றையெல்லாம் மீறித் தான் விக்கினேஸ்வரன் மாகாண சபையில் அந்த இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். ஆக மக்களிடம் பேசுகின்ற போது இங்கு இனஅழிப்பு நடைபெற்றிரக்கிறது. பல இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றவர்கள் அதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி ஐ.நா சபைக்கு அனுப்புவதைச் செய்ய வேண்டாமெனத் தடுப்பது எந்த வகையில் அவர்களது இராஐதந்திரம் சம்பந்தமானது என்ற கேள்வியெல்லாம் எழுகிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைக் காப்பாற்றுவதாகவே இருந்ததே தவிர அவர்கள் ஐக்கிய தேசியக் சட்சி அரசாங்கத்தின் முகவர்களாகச் செயற்பட்டார்களே தவிர உண்மையாகவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவில்லை. ஆகவே ஒரு மாற்றுத் தலைமை தேவைப்பட்டது.
இதில் சில பேர் சுரேசிற்கு ஆசனம் கொடுக்கப்படவில்லை. அதனால் தான் மாற்றுத் தலைமை தேவைப்பட்டதாக சொல்லுவார்கள். ஆனால் அதை நான் இப்போதல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்பாக அதாவது நான் பாரர்ளுமன்ற உறுப்பினராக இருந்த போது கூட இவர்கள் தவறான பாதையில் போகின்ற போதெல்லாம் கூட பல கேள்விகளை கேட்டிருக்கின்றேன். அதனைத் தடுப்பதற்கு எங்களால் செய்யக் கூடிய Nலைகளையெல்லாம் நாங்கள் செய்தும் இருக்கின்றோம்.
ஆகவே இந்த விசயங்களைப் பெர்றுத்த வரையில் மிக ஆரம்பத்தில் இருந்தே நான் தெளிவாக கூறியே வந்திருக்கிறேன் என்பது தான் உண்மையானது. அந்த வகையில் இதனை ஒரு சரியான தடத்தில் கொண்டு செல்வதற்கான மாற்றுத் தலைமை தேவைப்பட்டது. அது தொடர்பாக கடந்த இரண்டு மூன்று வருசமாக பல கலந்துரையாடல்களும் நடந்து அதனுடைய முடிவு தான் இப்பொழுது ஒரு மாற்று அணியொன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகியிரக்கின்றது.
அதில் இப்போது நான்கு கட்சிகள் சேர்ந்திருக்கின்றது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனையோர் யாரும் இருந்தால் அவர்களும் வந்து இணைந்து கொள்ளலாம். ஏன்பது தான் இப்போதிருக்கக் கூடிய நிலவரமாக உள்ளது.
இந்தப் புதிய கூட்டணிக்கு நிச்சயமாக மக்களது ஆதரவு இருக்கும். இது இன்று நேற்றல்ல. கடந்த இரண்டு வருவடங்களுக்கு மேலாக இந்த நிலைமைகளைப் பார்த்தீர்களானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறுவிடுகின்றது. தவறான பாதையில் போகின்றது. அவர்களது செயற்பாடுகள் தவறாக முன்னெடுக்கப்படுகின்றது என்றதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டே வந்தன.
இன்னும் சொல்லப் போனால் nஐனிவாவில் கூட கால அவகாசத்தைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகின்ற செயற்பாடு நடக்கின்றது என்றும் அது தவறானது என்றும் சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் எதனைம் செய்ய மாட்டாது. கால அவகாசம் கொடுப்பதனூடாக எல்லாமே மறந்து போகின்ற சூழ்நிலை தான் வரும் என்றெல்லாம் சொல்லப்பட் பொழுதும் கூட கூட்டமைப்பின் தலைமை அதனை ஏற்றுக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமான முறையில் தான் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
ஆகவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான கூட்டமைப்பின் செயற்பாடுகள் என்பது மிக மோசமான முறையில் அதாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாகத் தான் நடந்து கொண்டு வந்தது. அதன் தலைமைத்துவம் என்பது தவறான பாதையில் போகின்றது. ஆகவே அதற்கு மாற்றுத் தலைமை தேவை என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.
அதன் மாற்று அணியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே நிச்சயமாக தமிழ் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றே நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
Post a Comment