மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ அகில இலங்கை சைவ மகாசபையின் 'அன்பே சிவம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகாசபையின் 'அன்பே சிவம்' விருது வழங்கலும் சஞ்சிகை வெளியீடும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அகில இலங்கை சைவ மகாபையின் தலைவர் சிவத்திரு ந.சண்முகரத்தினம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை சைவ மகாசபையின் அன்பே சிவம் விருது மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அன்பே சிவம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஆசியுரையினை திருகோணமலை தென்கயிலை ஆதின குரு முதல்வர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ்ப்பாணம் சின்மயா ஞானவேல் ஆச்சிரம வதிவிட ஆச்சாரியார் தவத்திரு. சிதாகாசானந்தா சுவாமிகள் ஆகியோர நிகழ்த்தியிருதார்.
நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கந்து கொண்டிருந்தார்.
அத்தோடு யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான தொழிர்நுட்ப பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒய்வுநிலை விரிவுரையாளர் சி.குணசீலன் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.தேவநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment