வட்டுக்கோட்டை, சங்கரத்தை சந்தியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளார்.
அலுவலகம் திறப்பதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட குழுவினரின் பங்குபற்றலுடன் சங்கரத்தை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
குறித்த அலுவல திறப்புவிழாவில் மத குருமார்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய அங்கஐன் தெரிவித்ததாவது..
கடந்த அரசாங்கம் கொடுக்கவேண்டிய பணம் மாவட்ட செயலகங்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 880 மில்லியன் ரூபாய் வேலைத்திட்டத்திற்கான பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை ஏன் என்றால் அதற்கான ஒதிக்கீடு இல்லை.
கம்பரெலியா என்று கிராமம் கிராமமாக கூறியவர்கள் இன்று அவர்களுடைய பணத்தையும் நாங்கள் பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால் மக்களுடைய பணம்தான் கிடைக்கவில்லை, ஒப்பந்ததாரர்களின் பணம்தான் கிடைக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கு இரண்டு வீடு கட்டியுள்ளனர்.
ஆவர்களில் ஒருவர் மாவிட்டபுரத்தில் வீடு கட்டுகின்றார், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டியிருக்கின்றார், முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நான்கு ஐந்து வைத்தியசாலை திறந்துவிட்டார். இது எல்லாம் யாருடைய பணம் சிந்தித்தால் நாங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும்..
Post a Comment