மேலும் இந்து மதத்திற்குப் பாதுகாப்பில்லை என்றும் இந்து மதத்தை அழிக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ள சச்சிதானந்தம் இந்து மதத்தை பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழiமை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதற்போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் மதமாற்ற தடைச்சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மதமாற்ற தடைச்சட்ட தேவை என்பதை நாங்கள் கோரிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை நிறைவேற்ற முன் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றியிருக்கலாம். இன்று ஆட்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் இச் சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வடக்கு மாகாண சபையின் மதமாற்ற சட்டத்தை நிறைவேற்றி நடமுறைப்படுத்துமாறு கோரினேன். ஆனால் எனது கோரிக்கை மறுக்கப்பட்டது.
அதை மறுத்தவர் வேறு யாரும் இல்லை. சைவராக உள்ளவரும், இப்போதும் வடமாகாண சபையின் பேரவைத் தலைவராக உள்ள சி.வி.கே.
சிவஞானம்தான் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மாதமாற்ற தடைச்சட்டம் என்பது தமிழர்களின் முன்னுரிமையான விடயம் இல்லை என்றும் சி.வி.கே.சிவஞானம் என்னிடத்தில் நியாயப்படுத்தியும் இருந்தார்.
மதமாற்ற தடைச்சட்டம் வடமாகாணத்தில் எவ்வாறு நடமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற மாதிரி வரைபையும் நான் பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தேன். அதனையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இங்கு மதமாற்ற தடைச்சட்டத்தை வரவிடமாமல் தடுத்து, மதமாற்றத்தை நடமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனே.
இலங்கையில் மெதடிஸ்த சபை என்ற ஒன்ற ஒன்று உள்ளது. அதற்கு உட்பட்ட அதிக தேவாலயங்கள் இங்கு உள்ளது. அந்த சபையின் துணைத்தலைவர் சுமந்திரனே பதவி வகிக்கின்றார். 2018 ஆண்டின் மெதடிஸ்த சபையின் ஆண்டறிக்கையினை சுமந்திரனே எழுதியிருந்தார்.
அந்த அறிக்கையில் நாங்கள் இந்த ஆண்டில் (2018) மதமாற்றத்தை வேகமாக எடுத்துச் செல்ல முடியவில்லை. சிவசேனை தொண்டர்கள் வந்து தடுக்கின்றார்கள். தெருவிலே எங்களை போக விடுகின்றார்கள் இல்லை. கல்லால் அடிக்கின்றார்கள். ஓட ஓட விரட்டுகிறார்கள் என்று அதில் சுமந்திரன் எழுதியுள்ளார்.
சுமந்திரனின் தனது வருவாய் பற்றிய அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் எனது மனைவியான சாவித்திரி சுமந்திரனின் வருவாய் ஆயிரத்து 100 டொலர் என்று தகவல் கொடுத்திருந்தார்.
அந்த வருமானத்தை ஜ.எவ்.இ.எஸ் என்ற நிறுவனமே சுமந்திரனின் மனைவிக்கு அந்த வருமானத்தை கொடுக்கின்றது. இலங்கை பணத்தின் மதிப்பில் 2 இலட்சம் ரூபாவினை மதமாற்றம் செய்வதற்காகவே அந்த நிறுவனம் சுமந்திரனின் மனைவிக்கு கொடுக்கின்றது.
இந்த நிலையில் எவ்வாறு வடக்கு மாகாண சபையில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்படும். மதமாற்ற தடைச்சட்டம் வருவதை புத்தர்கள் தடுக்கவில்லை. அவர்கள் அந்த சட்டத்தை கொண்டுவர விரும்புகின்றார்கள் என்றார்.
Post a Comment