யாழ் நகரில் கட்டாக்காலிகளைப் பிடிக்கும் செயற் திட்டமொன்றை யாழ் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பிற்கமையவே இந்தச் செயற்பாட்டை மாநகர சபை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக மாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை வடக்கு மாகாண ஆளுநர் பிஎச்எம். சாள்ஸ் அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய நேற்று முதல் யாழ் நகரில் கட்டாக்காலிகளை பிடிக்கும் பணிகளை மாநகர சபை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரையில் பல கட்டாக்காலிகள் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment