காரைநகரில் விளையாட்டுக்கழக கட்டிடம் திறந்து வைப்பு - Yarl Voice காரைநகரில் விளையாட்டுக்கழக கட்டிடம் திறந்து வைப்பு - Yarl Voice

காரைநகரில் விளையாட்டுக்கழக கட்டிடம் திறந்து வைப்பு


காரைநகர் கலாநிதி விளையாட்டு கழகத்தின் புதிய கட்டடத்தை முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  விஜயகலா மகேஸ்வரன்  திறந்து வைத்தார்.

பாராளுமன்ற 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகத்திற்கென புதிதாக விளையாட்டுக்கழக கட்டிடடம் அமைக்கப்பட்டது. இக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை அண்மையில் விஐயகலா மகேஸ்லவரன் நாட்டியிருந்தார். '

இந் நிலையில் ,ன்றையதினம் அக் கட்டிடத்தை பிரபல வர்த்தகர் ஈஎஸ்பி நாகரத்தினத்துடன் ,ணைந்து திறந்து வைத்துள்ளார்.

இதன் போது விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட பொட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் விளையாட்டுக்கழக அணி வீரர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post