இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பின் சுரேந்திரன் வலியுறுத்து - Yarl Voice இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பின் சுரேந்திரன் வலியுறுத்து - Yarl Voice

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பின் சுரேந்திரன் வலியுறுத்து

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே.என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்இ

இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தார்.அதற்கு மாற்றீடாக உள்ளக பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக கூறியிருந்தார். எனினும் அந்த கோரிக்கையை திடடவடடமாக ஐநா ஆணையாளர் நிராகரித்துளளார்.இது தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த பாரிய வெற்றி.

இலங்கை அரசாங்கம் தங்கள் நினைத்தது போல 30ஃ1 தீர்மானத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம் என கனவு கண்டதையும் அறிக்கைகள் விட்டதையும் அறிந்திருந்தோம்.அதற்கு மனித உரிமை ஆணையாளர் எதிர்ப்பினை வெளியிடடதான் பின்னர் குறிப்பாக உள்ளக பொறிமுறையான உள்ளக விசாரணைக்கு எதிர்ப்பினை வெளியிடடதன் பின்னர் வெளிநாட்டு ஐநா பிரதிநிதிகளும் சர்வதேச மன்னிப்புச் சபையும்  இலங்கையின் விசாரணையை 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கின்ற முக்கிய கோரிக்கை என்னவென்றால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் அதேவேளை சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் கூடிய ஓர் விசாரணை இலங்கை மீது நடாத்தப்பட வேண்டும்.

இதேவேளை கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் தங்களின் அரசியல் பலத்தை பிரதிநிதித்துவப் படுத்தியமையினால் தான் இன்று இலங்கை அரசு இக்கடடான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.எனவே எதிர்வரும் காலத்திலும் தமிழ் மக்கள் உறுதியுடன் ஒற்றுமையான பலத்தினை வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் நாம் இதுவரை காலம் சர்வதேச அரங்கில் நகர்த்திய விடயங்களை அறுவடை செய்ய முடியும்.ஆகவே எம்மீது விமர்சித்து எள்ளிநகலாடிய பலருக்கு தக்க பதிலடியாகவே ஐநா முடிவுகள் வந்துள்ளன.

சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே. ஆகவே இந்த முயற்சி தொடர் வெற்றியை பெற்றுக்கொள்ள எதிர்காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை பலப்படுத்துங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீதி இந்த பிரேரணையை கொண்டுவருவதற்கான ஆரம்பகட்ட் விசாரணைகள் முடிவடைந்திருக்கின்றன.

அதன் பிரகாரம் அதற்கு முன்னாள் வைக்கப்பட்டுள்ள சாடசிகள் அடிப்படையில் இந்த பிரேரணை உருவாக்கப்பட்டு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. ஆனால் யுத்தக் குற்றவியல் சம்மந்தமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டிருக்கின்றது. யுத்தக்க குற்றவியல் சம்பந்தமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகவே உள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post