யாழ். பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கு யாழில் வைத்து தொண்டமான் உதவி - Yarl Voice யாழ். பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கு யாழில் வைத்து தொண்டமான் உதவி - Yarl Voice

யாழ். பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கு யாழில் வைத்து தொண்டமான் உதவி

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்திற்கு விஐயமெனாற்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும் யாழ் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

அதே போல வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கான மடிக்கனணிகளையும் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கியிருந்தார்.

யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் தொண்டமான, பாரர்ளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விஐயத்தின் போது பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

ஆமைச்சரின் இந்த விஐயத்தில் அமைச்சின் அதிகாரிகள், அவரது கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் புதல்வருமான iPவன் தொண்டமான் உட்பட யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்த கொண்டிருந்தனர்.

இதே வேளை இரர்னுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுகிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கு இன்று காலையில் அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post