தமிழ் மக்கள் தேசிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் பெரும்பான்மை இனம் என்ற சிங்கள தேசத்தால் தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.எமது மக்களின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகள் நடைபெற்றது.
எனினும் எமது போராட்டம் சர்வதேசத்தின் உதவியுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு மௌணிக்கப்பட்டது.அவ்வாறு மௌணிக்கப்பட்ட போது போர்க் கைதியாக எனது கணவனை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த பெண்ணாகவும் நடைபெற்ற இன அழிப்புக்கு ஓர் சாட்சியாகவும் வாழ்ந்து வருகின்றேன்.
அந்த சூழ்நிலையில் அரசியலுக்குள் நுழைந்துள்ளேன்.பல கசப்பான அனுபவங்களுடன் பெண் தலைமைத்துவ குடும்பமாக நான் அனுபவித்து வருகின்றேன்.இதன் ஊடாக என்னைப் போன்ற பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எவ்வாறான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நேரடியாக உணர்ந்தவளாக இருந்து வருகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டு வருகின்றது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் உட்பட பலர் வெளியேறி இருக்கின்றோம்.நாம் இன்று மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கியுள்ளோம்.இந்த கூட்டணி வடக்கு கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும்.எமக்கான முழு ஆதரவினை மக்கள் எமக்கு தர வேண்டும் என்றார்.
--
Post a Comment