முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்காகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 'சுற்றாடலை பாதுகாத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டும்
சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் ஒழுங்கு விதிகளில் நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகளை அறிமுகப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் காலதாமங்களை இயன்றளவு குறைத்துக்கொள்வதோடு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment