ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு ஐ.நா.வில் அறிவிப்பு - Yarl Voice ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு ஐ.நா.வில் அறிவிப்பு - Yarl Voice

ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு ஐ.நா.வில் அறிவிப்பு


இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைப் பேரவையில் உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரம் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவினை அவர் இன்று அறிவிப்பார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் பேரவையில் உரையாற்றி வருகின்றார்.

இதற்கமைய ஐ.நாவில் நல்லாட்சிக்காலத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட 30க் கீழ் ஒன்று உட்பட பொறுப்புகூறுகின்ற தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தீர்மானத்திலிருந்து விலகுகின்ற போதிலும் ஐ.நாவுடன் தொடர்ந்தும் நல்லுறவுடன் செயற்படுவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40ஃ1 மற்றும் அதற்கு முந்தைய 30ஃ1 34ஃ1 ஆகியவற்றிலிருந்து விலகுகின்றோம். குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது.

 மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு. கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது குறிப்பாக இந்த ஜெனீவா தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை.

 அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அதனை காண்பிக்கவில்லை என்று அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post