வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டிர்கு தீர்வினை வழங்க கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள முரன்பாட்டிற்கு தீர்வினை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் அதன்படி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'தீர்வு எங்கே ? தீர்வு என்கே? சம்பளம் முரண்பாட்டிற்கு தீர்வு எங்கே ''ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம் சம்பள முரண்பாட்டை தீர்க்க ஒன்றிணைவோம்' 'வழங்கு இடைக்கால சம்பளத்தை வழங்கு' 'போராடுவோம் போராடுவோம் வெற்றி வரை போராடுவோம்' 'கொடுப்போம் அழுத்தம் கொடுப்போம் சம்பள சுற்றறிக்கை வெளியிட அழுத்தம் கொடுப்போம்' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
--
Post a Comment