5ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கல்வி அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு நடிகர் சூர்யா 'படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றிகள்' என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
Post a Comment