அமைச்சுப் பதவி ஏற்ற பின் 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை தாம் வாங்கியதாக ஜே.வி.பி முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நிரகரித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த மறுப்பை கூறியுள்ளார்.
அமைச்சு பொறுப்பை ஏற்றது முதல் அமைச்சுக்கு இதுவரை எந்தவொரு தளப்பாடங்களும் கொள்வனவு செய்யவில்லை என்றும் அமைச்சர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அமைச்சர் விமல் 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை கொள்வனவு செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment