இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நீரியல்வள துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்திய தலைமை அமைச்சர் மோடி மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
தொடர்ச்சியாக இந்திய மீன்வர்களின் அத்து மீறலினால் எமது வளம் சுரண்ட படுவதுடன் உள்ளூர் மீனவர்க்ளின் பொருட்களும் அழிக்கபடுகின்றது இதற்கு நட்ட ஈடு வழங்குவது தொடர்பில் கதைத்து உள்ளோம். அதற்கான நட்ட ஈடு வழங்கப்படும் என்றார்.
Post a Comment