காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி நிறுவனர் தின விழா - Yarl Voice காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி நிறுவனர் தின விழா - Yarl Voice

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி நிறுவனர் தின விழா

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் நிறுவுனர் தினவிழா இன்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் யாழ்ப்பாண பிரதேச செயலருமான சா.சுதர்சன் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றியதுடன் மாகாணமட்ட குழுநிலை சங்கீதப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பிரதம விருந்தினருடன் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் பாலச்சந்திரன் மற்றும் நிறுவுனர்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான திருமதி.முருகதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post