யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாக பாலியல் இம்சை மற்றும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த வாரம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்ததை அடுத்து. காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில்இ கணினி குற்றவியல் விசாரணை பிரிவின்;; ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
இதற்கமையஇ சம்பந்தப்பட்ட மாணவர்களின் கைத்தொலைபேசிகளை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் இதுவரை 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வகுப்புத்தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதேநேரம் கிளிநொச்சி வளாகத்தின் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பகிடிவதை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மாணவன் ஒருவரின் வீட்டின்மீது இனந்தெரியாதோர் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் உள்ள குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கிருந்த பொருட்கள் சிலவற்றிற்கும் சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழவினரால் நேற்றிரவு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவரின் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த மாணவன் யாழ்ப்பாண மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment