தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயற்பாடையும் ஒருபோதும் செய்யாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தார்
குறித்த கிராம மக்கள்இ நாடாளுமன்ற உறுப்பினரிடம் தங்களுடைய வீதி பிரச்சினைகள்இ வயல் நிலங்கள் இல்லாத பிரச்சினைகள் மற்றும் தங்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தங்களுடைய குறைகளை தெரிவித்திருந்தனர்
குறித்த சந்திப்பின் பின்னர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது 'கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாவலி எல் வலயத்திற்கும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கும் வரவு-செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்
நம்பிக்கையில்லா தீர்மானம் ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் உள்ளிட்ட சகலதிற்கும் நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். இன்று நித்திரைப்பாயில் திடுக்கிட்டு எழும்பியவர்களை போல தாங்கள் ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று இருக்கக்கூடிய போர்குற்றவாளிகளை நிறுத்தப்போவதாக தேர்தலுக்கான பசப்பு வார்த்தையினை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்
நான்கரை ஆண்டுகாலம் இவர்களின் ஆதரவுடன் ஐ.நா.மனிதஉரிமை பேரவையில் வழங்கப்பட்ட காலநீடிப்பில் எந்த ஒரு விடயத்தினையும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைமுறைப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்காமல் இருந்துவிட்டு தற்சமயம் தேர்தல் வரும் நேரத்தில் ஐ.நா.மனிதஉரிமை பேரவையில் தாங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வருகின்றார்கள்.
உண்மையில் பதவிக்கு ஆசைப்பட்டே அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டமூலங்களுக்கு என்னை தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு முண்டு கொடுத்தார்கள்.
வரவு-செலவுத்திட்டத்தில் இரட்டிப்பான நிதி ஒதுக்கீட்டிற்கு ஆதரவு கொடுத்தார்கள். ஐ.நா.மனித உரிமை பேரவையில் காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தார்கள் பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்மக்கள் நலன் சார்ந்து பேசவில்லை.
அதாவது நல்லாட்சி அரசாங்கத்தில் தங்கள் பதவிகள் சுகபோகங்களுக்காக அரசிற்கு முண்டு கொடுத்தவர்கள் எங்களுக்கும் அவ்வாறு தேவை இருந்திருந்தால் இவர்களுக்கு பின்னால் சென்று நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்திருக்க முடியும்.
ஆனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயற்பாடையும் செய்யப்போவதில்லை மாறாக எங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை வைத்துக்கொண்டு நிரந்தரமான அரசியல் தீர்வு அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல விடயங்களுக்காக எங்கள் கூட்டணி எதிர்காலத்தில் கொள்கை ரீதியில் மக்களுக்காக உழைப்போம்' என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment