மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு குட்டி கதை' எனும் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.
மேலும் சாந்தனு ஆண்ட்ரியா கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் 'செல்பி புள்ள' பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றதால் மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கதை' பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குட்டிக் கதை பாடலை பாடிய விஐய்
Published byYarl Voice Editor
-
0
Tags
cinema
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Post a Comment