கொரோனா வைரசை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களுடன் இந்திய விமானம்இ இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு செல்வதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதன்படி கொரோனா வைரசை ஒடுக்குவதற்கான மருந்து பொருட்களை சீனாவுக்கு இந்தியா அனுப்பி வைக்கிறது.
இந்த பொருட்களுடன் இந்திய விமானம் இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு செல்கிறது. இத்தகவலை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து விமானம் திரும்பி வரும்போது இந்தியா திரும்ப விரும்பும் சீன இந்தியர்கள் இடவசதியை பொறுத்து விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
Post a Comment