ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பேஷல்ட் கவலை வெளியிட்டுள்ளார்.
உள்ளக விசாரணை என்று இலங்கை கூறினாலும் கடந்த காலங்களாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதிலும் தீர்வு வழங்கப்படவில்லை என்பதையும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கான தீர்மனத்தை அறிவித்துள்ள நிலையில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
இலங்கையில் சிறுபான்மையினர் ஒருவிதமான வித்தியாசமான முறையில் நடத்தப்படுவதாக கூறியுள்ள ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையில் சிவில் நடவடிக்கைகளுக்கு இராணுவம் ஈடுபடித்தப்பட்டுள்ளமைக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Post a Comment