மன்னார் மீனவர்களை படகுடன் கைது செய்த இந்திய கடற்படை - Yarl Voice மன்னார் மீனவர்களை படகுடன் கைது செய்த இந்திய கடற்படை - Yarl Voice

மன்னார் மீனவர்களை படகுடன் கைது செய்த இந்திய கடற்படை



எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மன்னார் மீனவர்கள் ஐந்து பேரை படகுடன்  இந்திய கடற்படையால் கைது செய்துள்ளது.

மன்னார் மீன்பிடி துறைமுகத்தில்  இருந்து  இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற ஐந்து மீனவர்கள் தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டள்ளனர்.

 சர்வதேச கடல். எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக மீனவர்களை படகுடன் கைது செய்து ராமேஸ்வரம் மெரைன் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து மீதும் வழக்கு பதிவு செய்த மெரைன் போலிஸார் மீனவர்களுடம் விசாரனை நடத்த வருகின்றனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post