யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வருகின்ற என்.வேதநாயகம் மக்களுக்கு சிறந்த வேiயை ஆற்றி வருகின்றார். அவரைப் போன்று உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படக் கூடிய அதிகாரிகள் அவசியம். இதுவரை எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் மக்களுக்கான தனது சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.
அத்தோடு அவரது சேவை முடிவடைய இன்னும் சில மாதங்களே எஞசியிருக்கின்றன. ஆகவே இவரைப் போன்ற அதிகாரிகள் இன்னும் இருக்கின்ற கொஞ்ச காலத்தில் எமது மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்வார்கள். அத்தகைய திறமையும் ஆளுமையும் அவர்களிடத்தே இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது வடக்கு மாகாணத்தில் அரச அதிபர்கள் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது யாழ் மாவட்ட அரச அதிபருக்கான இடமாற்றமும் வந்திருப்பதாக அறிகிறோம். எனவே யாழ் மாவட்ட அரச அதிபரை இடமாற்ற வேண்டாமென்று கோருகின்றோம்.இது சம்மந்தமாக ஐனாதிபதியிடமும் கோரி கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புhதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உண்மையாகும் நேர்மையாகவும் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்ற அரசாங்க அதிபராக இருக்கின்ற வேதநாயகம் அவர்களை இடமாற்றுவதை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
அத்தோடு இங்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களும் மக்களுக்காகச் சேவையாற்றி வருகின்ற இவரைப் போன்ற அதிகாரிகள் இடமாற்றப்படுவது குறித்து மௌனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
Post a Comment