தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாதென்பதை முன்னணி புரிந்து கொள்ள வேண்டும் - தலைமைத்துவ சக்தி இல்லை என்றும் சுரேஸ் சாடல் - Yarl Voice தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாதென்பதை முன்னணி புரிந்து கொள்ள வேண்டும் - தலைமைத்துவ சக்தி இல்லை என்றும் சுரேஸ் சாடல் - Yarl Voice

தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாதென்பதை முன்னணி புரிந்து கொள்ள வேண்டும் - தலைமைத்துவ சக்தி இல்லை என்றும் சுரேஸ் சாடல்

தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாதென்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்ற வேலையைத் தான் முன்னணியினர் செய்து வருவதாகவும் முன்னணியிடம் தலைமைத்துவ சக்தி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளாமை மற்றும் தற்போது கூட்டணி தொடர்பில் முன்னணி முன்வைத்து வருகின்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இந்தக் கூட்டிற்குள் கொண்ட வர வேண்டுமென்ற காரணமாகவே இந்தக் கூட்டு உருவாகாமல் இருந்தது. இல்லையென்றால் ஒரு வருசத்திற்கு முன்னரே நிச்சயமாக இந்தக் கூட்டு உருவாகியிருக்கும். ஏனெனில் அது தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தமிழ்த் தேசிய இனப்பிச்சiனில் அக்கறையுடைய பலபேர் அவர்களுடன் பேசினார்கள்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருடனும் சேர்ந்து பேக மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே விக்கினேஸ்வரனுடன் மாத்திரம் சேர்ந்து போகலாம் வேறு யாருடனும் சேநர்ந்து போக முடியாது என்றவாறான கருதுகோள்களை அவர்கள் வைத்திருந்தாரகள்;. அந்த வகையில் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு அவர்கள்; தயாராக இல்லை.

இரண்டாவது உண்மையாகவே தமிழ் மக்கள் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகளில் அவர்களது இருப்புக்கள் என்பது பாதுகாக்கப்பட வேண்டும். கன்னிணாவை முல்லைத்தீவை இழந்து போகின்ற சூழ்நிலைய தமிழ் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை இழக்கின்ற சூழ்நிலை இருக்க. அவ்வாறு எல்லாவற்றையும் இழந்து போவர்களாக இருந்தால் வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும்.
இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சனைகள் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளாக இருக்கிறது. இதில் முக்கியமாக தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் இவ்வாறான ஐக்கியம் என்பது முக்கியம். ஆகவே தான் அவர்களையும் நாங்கள் இதில் இணைத்துக் கொள்ள வேண்டுமென நாங்கள் எதிர்பார்த்தோம்.
ஆனால் இதனை எவ்வளவு தூரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் தாங்கள் தனித்து நின்று எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்றிருக்கக் கூடிய சூழ்நிலையில் தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை'.
மாற்றுத் தலைமை என்பது நிச்சயமாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணி தேவை எனறு யோசிக்கின்றது. ஆகவே அந்த ஐக்கிய முன்னணியில் கNநை;திரகுமார் தரப்பினரும் வருவதற்கு விரும்பியிருந்தார்கள். அதற்காக பல பேச்சுக்களும் நடைபெற்றது. ஆனால் அவர்கள் இதில் வருவதற்குத் தயாராக இல்லை என்பது தான் நிலைமை.

ஆகவே அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதாவது தனித்து நின்று எநதனையும் சாதிக்க முடியாது. அதற்கான சூழ்நிலையும் இல்லை. ஆகையினால் குறைந்தபட்சம் இந்த இறுதி நேரத்திலாவது அவர்கள் அதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

இதே வேளையில் தற்பொது எமது கூடு;டணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அதில் முதலாவதாக பி அணி சீ அணி டி அணி என்று கNநை;திரகுமார் கொடுக்கிற பட்டப் பெயர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஏனையோர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதனைத் தான் செய்ய முடியுமே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டும் தலைமைத்துவ சக்தி என்பது நிச்சயமாக அவர்களிடம் கிடையாது. ஆகவே பிஇ சி அணி என்று சொல்வதில் எந்தவிதமான அர்த்ததுதம் இல்லாத ஒன்றாகவே பார்க்கிறோம்.'

ஏன்னைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயறிபடுகின்றோம். அந்தக் கொள்கையை மிகத் தெளிவாக நாங்கள் புரிந்துணர:வு ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம். ஆகவே அதன் பிரகாரம் தான் நாங்கள் செயற்படுவோம் என்பதையும் கூறியும் இருக்கின்றோம். இதே வேளை நாங்கள் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாகவும் இருக்கிறோம்.

அதாவது எங்களது நட்பு சக்திகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். அந்த எங்களது நட:பு சக்திகள் இல்லாமல் எங்களது பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஆகவே இந்தியா என்பது எம்மைப் பொறுத்தவரையில் எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர்களது உதவி ஒத்தாசை என்பது மிக மிக முக்கியமானது. அது இல்லாமல் எங்களது நாட்டினுடைய தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பது மிக மிக கடினமான ஒரு விடயம்.

ஆகவே இந்தியாவுடன் நாங்கள் நிச்சயமாகப் பேசுவோம். அவ்வாறு இந்தியாவுடன் பேசுவதை இந்திய ஏNஐன்ட் என்று அவர்கள் சொல்லுவார்களாக இருந்தால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போறதும் கிடையாது. ஆகவே தமிழ் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக எங்களது நட:பு சக்திகள் பலப்படுத்த வேண்டும்.

அது இந்தியாவாக இருக்கலாம். ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம். பெரிய பிரித்தானியாவாக இருக்கலாம். அமெரிக்காவாக இருக்கலாம். ஆக எங்களுடைய பிரச்சனைகளைக் கையாள்வதற்கு யார் இலகுவாக இருப்பார்கள் என்பது மிக மிக முக்கியமானது. ஆகையனால் இவர்களைப் போன்று நாங்கள் யாருடனும் பேச மாட்டோம் என்று நான் சொல்லமாட்டேன்.

குறிப்பாக அமெரிக்கா இந்தியா இலங்கை அரசுடன் பேச மாட்டோம் என்றால் யாருடன் பேசி பிச்சனைத் தீர்ப்பது என்ற கேள்வி இருக்கிறது. ஆகவே நிச்சயமாக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.

குறிப்பாக இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை. இந்தியா எமக்கு அருகில் இருக்கக் கூடிய நாடு. ஏழுகோடி தமிழ் மக்கள் இருக்கக் கூடிய நாடு. இலங்கைப் பிரச்சனையில் ஒரு பாரிய பங்களிப்பை செலுத்துகின்ற ஒரு நாடு. ஆகவே அவர்களுடன் பேசுவது மிக மிக முக்கியமானது. அதனை நாங்கள் செய்வோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post