வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்படுகின்ற இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசிய கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்தில் அவரது தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தின் பின்னர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
புதியதோர் கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கில் பல கட்சிகளை இணைத்து உடன்டை தயாரித்திருக்கின்றோம். அதில் சில கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் எட்டப்படாத நிலைமையும் இருக்கின்றது. ஆயினும் தற்பொது நான்கு கட்சிகளிடத்தே உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றன.
இந்தக் கூட்டணியின் அரசியல் குழுவில் கட்சிகள் பலவும் சம உரிமை கேட்கின்றனர். அவ்வாறு எல்லாருக்கும் சம உரிமை என்றால் அது சிக்கல் தான். அஅவ்வாறு பிரச்சனைகள் வருவது சகஐம் தான். ஆயினும் அவற்றைச் சீர் செய்து கொண்டே அடுத்த கட்டமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
குறிப்பாக அனந்தி சசிதரன் மற்றும் ஐங்கரநேசன் போன்றவர்கள் அரசியல் உயர் குழுவில் சம உரிமை கேட்கின்றனர். அதனாலே சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அனந்தி சசிதரன் அவற்றைத் தீர்த்துக் கொண்டு கூட்டணியில் இணைந்து செயற்பட இருக்கின்றார். ஆனால் ஐங்கரநேசன் இந்தச் கூட்டணியில் இணையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதே போல கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து கொள்ளவில்லை.
ஆகையினால் தற்போது நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதியதோர் கூட்டடை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்ய இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து கூட்டணியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என்றார்.
Post a Comment